/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மோசடி' வாலிபரை பிடிக்க திணறும் போலீஸ்: மேல் நடவடிக்கை தொடர முடியாத அவலம்
/
'மோசடி' வாலிபரை பிடிக்க திணறும் போலீஸ்: மேல் நடவடிக்கை தொடர முடியாத அவலம்
'மோசடி' வாலிபரை பிடிக்க திணறும் போலீஸ்: மேல் நடவடிக்கை தொடர முடியாத அவலம்
'மோசடி' வாலிபரை பிடிக்க திணறும் போலீஸ்: மேல் நடவடிக்கை தொடர முடியாத அவலம்
ADDED : ஜன 01, 2024 10:54 AM
சேலம்: சேலம், இரும்பாலை அடுத்த ஜாகீர்காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 31. இவர், 2013ல் ஈரோட்டில், 'சூர்யா ஈமு பார்ம்ஸ்' தொடங்கி, 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தார். தொடர்ந்து சேலம், ராமகிருஷ்ணா சாலையில் ஈமு பார்ம்ஸ் தொடங்கினார். அதன்மூலம், 74.35 லட்சம் ரூபாய் மோசடி செய்தார். தவிர மதுரை உள்பட சில மாவட்டங்களில், அடுத்தடுத்து ஈமு பார்ம்ஸ் தொடங்கி கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரிந்தது. தற்போது இரு வழக்குகளும், கோவை, 'டான்பிட்' நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இதுதொடர்பாக அடுத்தடுத்து, 'சம்மன்' அனுப்பியும் சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்த, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் கூறுகையில், ''தனிப்படை அமைத்து தேடியும் சுரேஷ் சிக்கவில்லை. அவர் இருக்கும் இடம் தெரிந்தால், 94434 - 26675, 94430 - 58288 என்ற எண்களில் தகவல் தரலாம். ஏற்கனவே சேலத்தில் மற்றொரு ஈமு பார்ம்ஸ் மோசடி தொடர்பாக, ஈரோடு, பெருந்துறை, குன்றத்துார், சக்தி நகரை சேர்ந்த குருசாமி, 37, என்பவரை கைது செய்துள்ளோம். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் சுரேஷ் ஆஜராகாததால் வழக்கில் மேல் நடவடிக்கை தொடர முடியாத நிலை உள்ளது,'' என்றார்.