/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேனரை போலீசார் கிழித்ததாக வி.சி.,யினர் சாலை மறியல்
/
பேனரை போலீசார் கிழித்ததாக வி.சி.,யினர் சாலை மறியல்
பேனரை போலீசார் கிழித்ததாக வி.சி.,யினர் சாலை மறியல்
பேனரை போலீசார் கிழித்ததாக வி.சி.,யினர் சாலை மறியல்
ADDED : நவ 18, 2024 03:11 AM
ஆத்துார்: ஆத்துார் நகர் பகுதிகளான, ராணிப்பேட்டை, கடைவீதி, காம-ராஜர் சாலை, உடையார்பாளையம், புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறா-கவும் வைத்துள்ள பேனர்களை, நேற்று இரவு, 9:00 மணிக்கு போலீசார் அகற்றினர். அப்போது கிரைன்பஜாரில், வி.சி., கட்சி பேனரை, ஆத்துார் டவுன் போலீசார் கிழித்து சாலையில் வீசிய-தாக கூறி, அக்கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு, 10:30 மணிக்கு, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர். அப்-போது, 'தி.மு.க., பேனர் அருகே, வி.சி., பேனரை மட்டும் அகற்-றியதோடு கிழித்து வீசியுள்ளனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கட்சியினர் கூறினர். விசாரித்து நடவ-டிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இரவு, 11:40 மணிக்கு, கட்சியினர் கலைந்து சென்றனர். இச்சம்ப-வத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.