/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவிலில் திருடியவரை விரைவாக கைது செய்ய போலீசாரிடம் வலியுறுத்தல்
/
கோவிலில் திருடியவரை விரைவாக கைது செய்ய போலீசாரிடம் வலியுறுத்தல்
கோவிலில் திருடியவரை விரைவாக கைது செய்ய போலீசாரிடம் வலியுறுத்தல்
கோவிலில் திருடியவரை விரைவாக கைது செய்ய போலீசாரிடம் வலியுறுத்தல்
ADDED : டிச 28, 2024 02:29 AM
காரிப்பட்டி: காரிப்பட்டி அடுத்த ஆலடிப்பட்டி ஊராட்சி வாலுாத்து மாரி-யம்மன் கோவிலில், கடந்த நவ., 12 அதிகாலை சத்தம் கேட்டது. மக்கள் சென்று பார்த்தபோது, ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, சுவாமி நகை, கோவில் பணத்தை திருடியது தெரிந்-தது. மக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிவிட்டு தப்பிவிட்டார்.
ஆனால் மர்ம நபர் வந்த பைக்கை, கோவில் முன்பே விட்டுச்-சென்றார். இதுகுறித்து மக்கள் தகவல்படி, காரிப்பட்டி போலீசார் பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று, காரிப்பட்டி ஸ்டேஷனுக்கு சென்ற அப்பகுதி மக்கள், 'ஒன்றரை மாதத்துக்கு முன் திருடுபோன நிலையில், பைக்கால் திருடன் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து, கோவில் நகை, பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்' என்றனர்.