/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை பறிபோனதாக நாடகம் பெண்ணை எச்சரித்த போலீஸ்
/
நகை பறிபோனதாக நாடகம் பெண்ணை எச்சரித்த போலீஸ்
ADDED : மே 22, 2025 01:36 AM
ஓமலுார், ஓமலுார் அருகே எம்.செட்டிப்பட்டியை சேர்ந்த, 28 வயது பெண், நேற்று முன்தினம், ஓமலுார் போலீசில் புகார் அளித்தார்.
அதில் இரு மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கி, கைகளை கட்டிப்போட்டு, 3 பவுன் நகையை பறித்துச்சென்றதாக தெரிவித்திருந்தார். டி.ஐ.ஜி., உமா உத்தரவுப்படி, சம்பவ பகுதியில் போலீசார் விசாரித்ததில், சம்பவத்துக்கு வாய்ப்பில்லை என்பது போல் போலீசாருக்கு தெரியவந்தது.
உடனே, புகார் கொடுத்த பெண்ணிடம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அப்பெண் நகையை பறிகொடுத்தது போல் நாடகமாடியது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
புகார் அளித்த பெண், அவரது திருமணத்துக்கு முன் உறவினர்களிடம், 90,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அத்தொகையை கேட்டு உறவினர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். அதனால் நகையை பறிகொடுத்ததாக கூறிவிட்டு, அதை விற்று கடனை அடைக்க நினைத்து நாடகமாடியுள்ளார். கர்ப்பிணி என்பதால், பெண்ணை எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பிவிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.