/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொளத்துார் வட்டாரத்தில் குளம், கிணறு நீர்மட்டம் உயர்வு
/
கொளத்துார் வட்டாரத்தில் குளம், கிணறு நீர்மட்டம் உயர்வு
கொளத்துார் வட்டாரத்தில் குளம், கிணறு நீர்மட்டம் உயர்வு
கொளத்துார் வட்டாரத்தில் குளம், கிணறு நீர்மட்டம் உயர்வு
ADDED : அக் 27, 2024 04:20 AM
மேட்டூர்: சேலம் மாவட்டம் கொளத்துார் வட்டாரத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. கடந்த, 1 முதல் நேற்று வரை, 16 நாட்களில், 316 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, 20ல், 144.6 மி.மீ., மழை பெய்தது. அந்த வட்டாரத்தில், 4,001 விவசாய கிணறுகள், 4 ஏரிகள், சிறு குளங்கள் உள்ளன. கடந்த, 1 முதல் தொடர்ந்து பெய்த மழையால், கிணறுகளில் அதிகபட்சம், 10 அடி வரை நீர்-மட்டம் உயர்ந்துள்ளது. சிவிலிகரடு ஏரி, கொத்தனேரி, தும்பல்-காட்டு பள்ளம் ஏரி, ஏரிக்காடு ஏரி ஆகியவற்றில், 50
சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. சாம்பள்ளி ஊராட்சி மாசிலாபாளையத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2006 - 07ல் கட்டிய
சிறு குளம், 5 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளது.