/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
10.71 லட்சம் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு
/
10.71 லட்சம் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு
ADDED : ஜன 06, 2024 12:46 PM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 10.71 லட்சம் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், 1,715 ரேஷன் கடைகள் கட்டுப்பாட்டில், 10,98,536 ரேஷன் கார்டுகள் உள்ளன.
அதில், 10,71,905 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட உள்ளது. சர்க்கரை கார்டு, 24,814, 'என்' கார்டு(கவுரவ அட்டை) 1,817 என, 26,631 கார்டுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது என, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தகுதியுள்ள நுகர்வோருக்கு தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன், 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக பெறலாம். அதற்கு ரேஷன் விற்பனையாளர் வீடுதோறும் சென்று, 'டோக்கன்' வினியோகிக்கும் பணி விரைவில் தொடங்கும். பின் குறிப்பிட்ட தேதி, நேரத்தில், ரேஷன் கடைக்கு சென்று நுகர்வோர் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும், 200 பேர் பொங்கல் பரிசு பெற ஏதுவாக, 'டோக்கன்' வினியோகம் இருக்கும்.இதுகுறித்து ரேஷன் விற்பனையாளர்கள் கூறுகையில், 'ஒரு கட்டில், 20 எண்ணிக்கை கொண்ட முழு கரும்பு, ரேஷன் கடைக்கு வினியோகமாகும். ஆனால் எண்ணிக்கை குறையாமல் தரமான கரும்பு வழங்கினால் மட்டும் நுகர்வோரின் பேச்சுக்கு ஆளாவதை தவிர்க்க முடியும்' என்றனர்.