ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு மாநில நிர்வாகி, பெங்களூரு புகழேந்தி அளித்த பேட்டி: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி சரியில்லாத கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணிக்கு அண்ணாமலை பலிகடா ஆக்கப்பட்டார்.
புது தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து. அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு, கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்தும், முதல்வர் நீக்க வேண்டும். கோடநாடு வழக்கில் விசாரித்து நடவடிக்கை எடுக்காமல், தி.மு.க., அரசு உள்ளது. இவ்வாறு கூறினார்.

