/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் படிகளுக்கு 39ம் ஆண்டாக பூஜை
/
கோவில் படிகளுக்கு 39ம் ஆண்டாக பூஜை
ADDED : பிப் 17, 2025 02:18 AM
சேலம்: சேலம் அம்மாபேட்டை, குமரகிரி திருப்படி திருவிழா குழு சார்பில், தண்டாயுதபாணி கோவிலில் உள்ள படிகளுக்கு, 39ம் ஆண்டாக சிறப்பு பூஜை நேற்று நடந்தது. குழு தலைவர் சிவசண்-முகம் தலைமை வகித்தார்.
அதில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷகம் செய்து பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் படிகளுக்கு மஞ்சள், குங்-குமம், சந்தனம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, குருக்கள் மந்திரம் சொல்ல, பக்தர்கள், பூஜை செய்தனர். சன்ன-திக்கு செல்லும் அனைத்து படிகளுக்கும் பூஜை நடத்தி, தீபாரா-தனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குழு செயலர் பச்சியப்பன், பொருளாளர் ஜெயகோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்-பட்டது.

