/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குமரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்க பூஜை
/
குமரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்க பூஜை
குமரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்க பூஜை
குமரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்க பூஜை
ADDED : செப் 05, 2025 01:38 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை அருகே குமரகிரி தண்டாயுதபாணி கோவில், மலை மீது உள்ளது. அதன் கும்பாபிேஷக விழாவுக்கு, திருப்பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் மலைப்பாதை சீரமைப்பு; கோவில் மதில்சுவர்; சுற்றுப்பிரகார கருங்கல் தரைத்தளம் அமைக்க, 1.59 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் பணிக்கு, பூமி பூஜை நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 3 பணிகளையும் தொடங்கி வைத்தார்.
கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி, அறங்காவலர் குழுவின் மாவட்ட தலைவர் முருகன், கோவில் தலைவர் ஆறுமுகம், அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, செயல் அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.