/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தபால் அனுப்பும் போராட்டம்
/
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தபால் அனுப்பும் போராட்டம்
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தபால் அனுப்பும் போராட்டம்
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தபால் அனுப்பும் போராட்டம்
ADDED : செப் 19, 2024 07:40 AM
சேலம்: ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் தமிழக அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
சேலத்தில் மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கிழக்கு கோட்ட தலைமை அஞ்சலகத்தில், மதியம், 1:00 மணிக்கு கோரிக்கை தபால் அனுப்பி அரசை வலியுறுத்தி
போராட்டத்தை வெளிப்படுத்தினர்.இதில் மாவட்டத்துக்கு உட்பட்ட, 20 ஒன்றியங்களை சேர்ந்த, 385 ஊராட்சிகளில், 226 செயலர்கள், தலா, 4 தபால்களை அனுப்பினர். அதன்படி தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சி அமைச்சர், ஊரக வளர்ச்சி கூடுதல்
தலைமை செயலர், இயக்குனர் ஆகியோருக்கு தனித்தனியே என, 904 தபால்கள் அனுப்பப்பட்டன. தொடர்ந்து வரும், 27ல் ஒருநாள் தற்செயல் விடுப்பெடுத்து, சென்னையில் தமிழக அளவில் பெருந்திரள் முறையீட்டு
இயக்கம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

