ADDED : ஜூலை 25, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், அனைந்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கிழக்கு கோட்ட தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோட்ட தலைவர் நவீன் தலைமை வகித்தார்.
அதில் ஒருங்கிணைந்த பட்டுவாடா மைய திட்டத்தை அரசு கைவிடுதல்; 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தல் உள்பட, 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோட்ட செயலர் ஜெயந்தன், ஜி.டி.எஸ்., சங்க செயலர் மோகன், எப்.என்.பி.ஓ., சங்க கோட்ட தலைவர் ஜெயபிரகாஷ், பென்ஷனர் சங்க செயலர் நேதாஜி உள்ளிட்ட சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.