/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கறுப்பு பட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி
/
கறுப்பு பட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி
ADDED : செப் 19, 2024 07:39 AM
சேலம்: மதுரை, திருப்பரங்குன்றம் துணை அஞ்சலகத்தில் தபால்காரராக பணிபுரிந்த சுமதி, 30, கடந்த, 12ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தற்கொலைக்கு காரணமான அஞ்சல் ஆய்வாளரை பணிநீக்கம் செய்து அவர் மீது போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக ஊழியர்கள், 2ம் நாளாக நேற்று கறுப்பு பட்டை அணிந்தபடி, பணியில் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் சேலம் கிளை செயலர் விஜயகுமார் கூறுகையில், ''இடமாறுதல் இன்றி ஒரே கோட்டத்தில் பல பதவிகள் வகித்து பணி நிறைவு செய்யும் அதிகாரிகளால் தான்
இத்தகைய கொடுமை நடக்கிறது. இதை கண்டித்து சேலம் கிழக்கு கோட்டத்தில், 56 துணை அஞ்சலகம், 211 கிளை அஞ்சலகம், 2 தலைமை அஞ்சலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், போஸ்ட்மேன், கிராம அஞ்சல்
ஊழியர்கள் கறுப்பு பட்டையுடன் பணிபுரிந்தனர்,'' என்றார்.