ADDED : மே 18, 2025 05:38 AM
சேலம்: தமிழக சிறைத்துறை தலைமையிடத்து துணைத்தலைவர் கனகராஜ், நேற்று சேலம் வந்தார். வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டியில், 50 ஏக்கரில் அமைய உள்ள, திறந்தவெளி சிறைக்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இரும்பாலையில் மாவட்ட சிறைக்கான, 50 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டார்.
மாலையில் சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, கைதிகளால் வழி நடத்தப்படும் கோழிப்பண்ணையை பார்வையிட்டு, மேலும் சிறப்பாக செயல்படுத்த அறிவுறுத்தினார். முன்னதாக காலையில் நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், 25 ஏக்கரில் அமையக்கூடும் மாவட்ட சிறைக்கான இடத்தை பார்வையிட்ட பின், அந்த மாவட்ட கலெக்டர் உமாவுடன் ஆலோசனை நடத்தினார்.
பின் சேலம் வந்த அவர், ஓய்வுக்கு பின் சென்னை புறப்பட்டார். டி.ஐ.ஜி., ஜெயபாரதி, சேலம் சிறை எஸ்.பி., வினோத், வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.