/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஜிவி' மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
'ஜிவி' மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 28, 2025 07:15 AM
மேட்டூர்: மேட்டூர், மாசிலாபாளையம், 'ஜிவி' மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.மேட்டூர், மாசிலாபாளையம், 'ஜிவி' மேல்நிலைப்பள்ளியின், 22வது ஆண்டு விழா மற்றும் கல்வி, விளையாட்டில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் அன்பழகன் வரவேற்றார். செயலாளர் அமல்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் காந்தி, சேலம் அரசு பொறியியல் கல்லுாரி இயந்திரவியல் துறை பேராசிரியர் சத்தியஞானம் ஆகியோர், சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினர்.
ஸ்ரீசெல்வலட்சுமி, ஸ்ரீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவர் பிச்சைமுத்து, இணை செயலாளர் கருணாகரன், மேட்டூர் வட்ட லாரி உரிமையாளர் சங்க பொருளாளர் ராஜரத்தினம், கொளத்துார் டாக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் பாராட்டி பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.

