/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரஜாஹிதா அறக்கட்டளை, ஷங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து 'சேது' திட்டம் அறிமுகம்
/
பிரஜாஹிதா அறக்கட்டளை, ஷங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து 'சேது' திட்டம் அறிமுகம்
பிரஜாஹிதா அறக்கட்டளை, ஷங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து 'சேது' திட்டம் அறிமுகம்
பிரஜாஹிதா அறக்கட்டளை, ஷங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து 'சேது' திட்டம் அறிமுகம்
ADDED : ஆக 16, 2025 02:37 AM
சேலம் சுதந்திர தினத்தையொட்டி, சென்னை பிரஜாஹிதா அறக்கட்டளை, ஷங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான யு.பி.எஸ்.சி.,-சி.எஸ்.இ., பயிற்சி திட்டம், 'சேது'வை அறிமுகப்படுத்தி உள்ளன.
இதுகுறித்து, பிரஜாஹிதா அறக்கட்டளை இயக்குனர் சூரஜ் சந்தோஷ்குமார் கூறியதாவது:
'சேது' திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பயிற்சி திட்டமாகும். இந்தியாவின் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், சம வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. முதல் கட்டமாக, 30 முழுமையான கல்வி உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில், 400 கல்வி உதவித்தொகைகளை வழங்கும். மாற்றுத்திறனாளிகளின் அரசியல் மற்றும் நிர்வாகத்துறைகளில் ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கும்.
இதற்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்காக, ஆக., 30ல், நாடு முழுவதும் உள்ள ஷங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மையங்களில், உதவித்தொகை தேர்வு நடக்கிறது. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
''முதல் ஆண்டில், இந்த திட்டம் ஆன்லைனில் நடத்தப்படும், மேலும், பிரெய்லி, பெரிய அச்சு, ஆடியோ மற்றும் திரை-வாசிப்பு இணக்கமான வடிவங்களில் பாடப் பொருள் வழங்கப்படும். எந்த குறைபாடும் தகுதியான தேர்வரை பின்தள்ளக்கூடாது என்ற எண்ணமே, 'சேது' திட்டத்தின் கனவாக இருக்கிறது. பிரஜாஹிதா அறக்கட்டளையுடன் சேர்ந்து இந்த முயற்சியை செயல்
படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,'' என, ஷங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் வைஷ்ணவி தெரிவித்தார்.
மேலும், விபரங்களுக்கு, பிரஜாஹிதா அறக்கட்டளையின் இ-மெயில் முகவரி, setu@prajaahita.org, ஷங்கர் IAS அகாடமியின் இ-மெயில் முகவரி, info@shankariasacacemy.com ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.