/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன் கூட்டியே பனி அரளி உற்பத்தி சரிவு
/
முன் கூட்டியே பனி அரளி உற்பத்தி சரிவு
ADDED : நவ 16, 2025 01:53 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஹெக்டேரில் பல்வேறு வகை அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலையில் செடியிலிருந்து மொக்கு பறித்து, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். அரளி வியாபாரத்தை நம்பி, 10,000 விவசாய குடும்பத்தினர் உள்ளனர். ஆனால் தற்போது, முன் கூட்டியே பனிப்பொழிவு தொடங்கியதால் அரளி உற்பத்தி சரிந்துள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டியை சேர்ந்த, அரளி விவசாயி சிவக்குமார் கூறியதாவது:
ஐப்பசி, கார்த்திகையில் பருவ மழை வரும். இந்த ஆண்டு ஐப்பசியில் மழை நின்ற பின், பனிப்பொழிவு தொடங்கி விட்டது. மார்கழி, தை மாதங்களில் பனிப்பொழிவு இருக்கும். பருவ நிலை மாறி, ஜப்பசியில் மழைக்கு பதிலாக பனிப்பொழிவதால், செடியில் புது அரும்புகள் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு ஏக்கரில் தினமும், 20 கிலோ மொக்கு உற்பத்தியாகும். தற்போது பனிப்பொழிவால், உற்பத்தி குறைந்து, 5 கிலோ மட்டும் கிடைக்கிறது. கார்த்திகையில் அய்யப்பன் கோவில் சீசன் நேரத்தில், அரளிக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் உற்பத்தி குறைந்ததால், வருமானம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

