/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது சிகிச்சை முறைகள் கருத்தரங்கில் விளக்கம்
/
புது சிகிச்சை முறைகள் கருத்தரங்கில் விளக்கம்
ADDED : செப் 21, 2024 06:50 AM
சேலம்: இந்திய மருத்துவ சங்க, சி.ஜி.பி., பிரிவு சார்பில் மருத்துவ துறையில் உள்ள பொதுவான பிரச்னைகள் குறித்த கருத்தரங்கம், மேற்கு மண்டல அளவில் சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்-துவமனையில் நேற்று நடந்தது.
இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில தலைவர் அபுல்-ஹாசன், ஐ.எம்.ஏ., முன்னாள் தேசிய துணைத்தலைவர் பிரகாசம் உள்பட பலர் பேசினர்.
தற்போது மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றம், புது மருந்து, மருத்துவ கண்டுபிடிப்பு, ஆய்வக அணுகுமுறை, இளமைகால ரத்தசோகையை தடுக்கும் வழிமுறை, மாரடைப்பு, மூளை பக்கவாதத்துக்குரிய கோல்டன் சிகிச்சை முறை, குழந்தை-களின் காய்ச்சலுக்கு நவீன சிகிச்சை முறை, குரங்கு காய்ச்சல், டெங்கு, சிக்கன் குனியா நோய்களுக்கு புது சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
மருத்துவர்கள் பாலமுருகன், கார்த்திக், ஐ.எம்.ஏ., சேலம் கிளை தலைவர் சாதுபகத்சிங், செயலர் குமார், அரசு மருத்துவமனை நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ராஜேஷ் செங்கோடன் உள்பட பலர் பங்கேற்றனர்.