/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபத்திருவிழாவால் அரளி விலை உயர்வு
/
தீபத்திருவிழாவால் அரளி விலை உயர்வு
ADDED : டிச 03, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, சேலத்தில் கடந்த, 25ல், ஒரு கிலோ சாதா அரளி, 120 ரூபாய், மஞ்சள், செவ்வரளி தலா, 140 ரூபாய்க்கு விற்றது. அப்படியே படிப்படியாக உயர்ந்து கடந்த, 1ல் சாதா அரளி, 340; மஞ்சள், செவ்வரளி தலா, 360 ரூபாய்க்கு விற்றது.
நேற்று சாதா அரளி, வெள்ளை, மஞ்சள், செவ்வரளி தலா, 400 ரூபாய்க்கு, விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கினர். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அரளி விலை உயர்ந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

