/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று சிவன் கோவில்களில் சொக்கப்பனை வழிபாடு
/
இன்று சிவன் கோவில்களில் சொக்கப்பனை வழிபாடு
ADDED : டிச 03, 2025 07:32 AM

சேலம், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மாலை, கோவில் முன் உள்ள கல் துாணில் திருக்கோடி தீபம் ஏற்றி, 'சொக்கப்பனை' கொளுத்தப்படுகிறது. இதற்காக நேற்று, திருக்கோடி ஏற்ற வசதியாக கல் துாணில் சாரங்கள் வைத்து படிகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அதேபோல் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், ஏற்காடு அண்ணாமலையார், பேளூர் தான்தோன்றீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களில், கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பரணி தீபம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், இன்று காலை, சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, பூசாரிகள் புன்னியாதானம் செய்து, தீச்சட்டியில் பரணி தீபம் ஏற்றுவர். நாளை இரவு, 8:00 மணிக்கு, கோவில் முன் சொக்கப்பனை(கூம்பு), கோவிலின், 5 நிலை கொண்ட ராஜகோபுர உச்சியில் இருந்து கொடி சேலை எரிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

