ADDED : அக் 04, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
அரிசிபாளையம் மாரியம்மன் கோவிலில், செந்தில்குமார், 53, என்பவர்
தங்கி, அதன் வளாகத்தை சுத்தம் செய்து வருகிறார். நேற்று பணியில்
ஈடுபட்டபோது, அக்கோவில் பூசாரி தனபால், 34, எதிர்ப்பு தெரிவித்து
தடுத்தார்.
தொடர்ந்து அவரை தள்ளிவிட்டு கட்டையால் தாக்கினார்.
செந்தில்குமாருக்கு கை முறிவு ஏற்பட்டதால், அங்கிருந்தவர்கள்,
அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி,
பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, தனபாலை கைது செய்தனர்.
