/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரதமர் பிறந்தநாள்: மினி மாரத்தான் போட்டி
/
பிரதமர் பிறந்தநாள்: மினி மாரத்தான் போட்டி
ADDED : செப் 29, 2025 02:16 AM
பனமரத்துப்பட்டி;பிரதமர் மோடி பிறந்தநாளை ஒட்டி, பனமரத்துப்பட்டியில், 7.5 கி.மீ., மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. பா.ஜ.,வின், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், போட்டியை தொடங்கி வைத்தார்.
சந்தைப்பேட்டையில் தொடங்கிய ஓட்டம், காந்தி நகர், ஏரி சாலை, ஒண்டிக்கடை வழியே சேலம் - நாமக்கல் நெஞ்சாலையை அடைந்து, மீண்டும் அதே வழியில் சந்தைப்பேட்டையில் நிறைவடைந்தது. ஏராளமான பெண்கள், மாணவ, மாணவியர் ஓடினர். வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்களுக்கு, பா.ஜ., நிர்வாகிகள் சான்றிதழ், மரக்கன்று, பதக்கம் வழங்கினர். மேலும் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. பா.ஜ.,வின், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் தமிழ்நேசன், சுற்றுச்சுழல் பிரிவு தலைவர் மோகன்ராஜ், விவசாய அணி தலைவர் வெங்கடாசலம், மாவட்ட செயலர் கந்தசாமி, நகர தலைவர் ஆதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகளிர் கபடி
சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், மகளிர் கபடி போட்டி வனவாசியில், மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. 16 அணிகள் மோதின. அதில் வெற்றி பெற்ற முதல் நான்கு அணியினருக்கு, மாநில விளையாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் நயினார் பாலாஜி, பரிசுகளை வழங்கினார். சேலம் பெருங்கோட்ட தலைவர் ராமலிங்கம், மாநில மகளிர் அணி தலைவி கவிதா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் நளினி, மாவட்ட பொதுச்செயலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.