/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கைதிகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறை பண்பலை'
/
'கைதிகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறை பண்பலை'
'கைதிகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறை பண்பலை'
'கைதிகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறை பண்பலை'
ADDED : அக் 27, 2024 04:18 AM
சேலம்: ''சிறை பண்பலை, கைதிகள் மனதில் சீர்திருத்தம் நோக்கி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்,'' என, சேலம் சிறை எஸ்.பி., வினோத் கூறினார்.
சேலம் மத்திய சிறைச்சாலையில், 18 பிரிவு கட்டடங்களில், 1,431 அறைகள் உள்ளன. அதில், 1,235 கைதிகள் அடைக்கப்பட்-டுள்ளனர்.அவர்கள், பட்டுப்புழு வளர்ப்பு, பேக்கரி, நெசவுக்கூடம், அலுவ-லக கோப்பு(பைல்கள்) தயாரிப்பு, மருத்துவமனைகளுக்கு கட்டில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்கின்றனர். அதற்கு கூலி வழங்கப்படுகிறது. தவிர விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இதுமட்டுமின்றி கைதிகள் தண்டனை முடிந்து திரும்பும்போது அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழிற்பயிற்சி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு சிறைக்கு வரும் முன் நல்ல முறையில் தொழிலில் ஈடுபட்டிருந்த, தனித்திற-மைகள் கொண்ட கைதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மூலம் மற்ற கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக, சேலம் மத்திய சிறையில் சிறை பண்பலையை, கடந்த, 19ல், சிறைத்துறை டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் தொடங்கி வைத்தார். அதில் திங்கள் முதல் சனி வரை, காலை, 6:30 முதல் இரவு, 7:30 மணி வரையும், ஞாயிறு மட்டும் இரவில், 8:30 மணி வரை என, ஒரு மணி நேரம் நீட்டித்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படுகின்-றன. இதற்கு நன்னடத்தையில் உள்ள, 10 பேர் தேர்வு செய்யப்-பட்டு, சுழற்சி முறையில் தினமும், 5 பேர், நிகழ்ச்சி தொகுப்பாள-ராக செயல்படுகின்றனர். மருத்துவர்கள் உள்ளிட்டோரும் பண்-பலை மூலம் கைதிகளுக்கு நற்கருத்துகளை வழங்குகின்றனர்.
'மன அழுத்தத்தை குறைக்கிறது'
இதுகுறித்து சிறை மருத்துவர்கள், கைதிகளிடம் கேட்டபோது, 'பண்பலை தொடங்கிய பின் பாடல், கருத்து கேட்பது, மன அழுத்தத்தை குறைக்கிறது. மருத்துவமனைக்கு கட்டில் உள்-ளிட்ட இரும்பு தளவாட உபகரணங்கள் செய்தல், வெல்டிங் வைத்தல் போன்ற பணிகளின்போது பாடல்களை கேட்டபடி தொழில் செய்கிறோம். இவை வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்ப-ளித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.
சேலம் சிறை எஸ்.பி., வினோத் கூறியதாவது: சேலம் சிறையில் நன்னடத்தை கைதிகள், 200 பேர் உள்ளனர். தொழிற்சாலை-களில், 300 பேர் பணிபுரிகின்றனர். கொலை செய்து சிறைக்கு வந்த கைதி, தொழிற்சாலையில் வேலை செய்தால் அதன் கூலியில், 20 சதவீதம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், மீதி அவரது குடும்பத்தினருக்கும் அனுப்பப்படும். கைதிகள் மாதம், 10,000 முதல், 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
அவர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுப்பது என்-பது சவாலான பணி. இதற்கு சிறைத்துறை சார்பில் பல்வேறு நட-வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைதிகள் மனதில் சிறை பண்பலை என்பது சீர்திருத்தம் நோக்கி ஒரு மாற்றத்தை ஏற்ப-டுத்தும். 18 பிரிவு கட்டடங்களில், 700 அறை பகுதிகளில் ஸ்பீக்கர், ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. சிறை பண்-பலை, கைதிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.