/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.4.50 கோடி மோசடி வழக்கு கைதி நெஞ்சு வலியால் சாவு
/
ரூ.4.50 கோடி மோசடி வழக்கு கைதி நெஞ்சு வலியால் சாவு
ரூ.4.50 கோடி மோசடி வழக்கு கைதி நெஞ்சு வலியால் சாவு
ரூ.4.50 கோடி மோசடி வழக்கு கைதி நெஞ்சு வலியால் சாவு
ADDED : ஜூலை 09, 2025 02:08 AM
சேலம், ரிசர்வ் வங்கி சார்பில் இரிடியம், காப்பர் விற்கப்படுவதால், அதை வாங்கி விற்றால், கூடுதல் பணம் கிடைக்கும். அதற்கு சேவை கட்டணம், அதிகாரிகளுக்கு கமிஷன் தர வேண்டும் என கூறி, மர்ம நபர்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசூல் வேட்டை நடத்தினர்.
இதுகுறித்த புகார்படி நடந்த விசாரணையில், 4.50 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், 60, உள்பட சிலரை கைது செய்தனர்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நித்யானந்தத்துக்கு, கடந்த, 6ல் நெஞ்சு
வலி ஏற்பட, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், ஜே.எம்.எண்: 3 மாஜிஸ்திரேட் முத்துகிருஷ்ண முரளிதரதாஸ், மத்திய சிறை, அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார்.