/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறையில் பயிரிட்ட கரும்புகளை அறுவடை செய்த கைதிகள்
/
சிறையில் பயிரிட்ட கரும்புகளை அறுவடை செய்த கைதிகள்
ADDED : ஜன 13, 2025 03:23 AM
சேலம்: திறந்தவெளி சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்ட, 10,000 கரும்புகளை, கைதிகளே அறுவடை செய்தனர்.
சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் பல்வேறு பொருட்கள் தயா-ரிக்கப்பட்டு, சிறை அங்காடி மூலம் விற்கப்படுகிறது. அதன்படி சிறை கட்டுப்பாட்டில் ஜாகீர் அம்மாபாளையத்தில் திறந்தவெளி சிறைச்சாலை செயல்
படுகிறது. அங்கு நன்னடத்தை அடிப்படையில் சில கைதிகள் பணிபுரிகின்றனர்.
அவர்கள், கத்தரி, வெண்டை, தக்காளி, பாகற்காய், பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். அங்கிருந்து மத்திய சிறைக்கு தேவையான காய்கறி அனுப்பப்படுகிறது. அதிக விளைச்சலின்போது மக்களுக்கும் குறைந்த விலையில் விற்கப்ப-டுகிறது.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு, 6 மாதங்களுக்கு முன் திறந்தவெளி சிறையில் முதல்முறை கரும்பு பயிரிடப்பட்டது. தற்-போது நல்ல விளைச்சல் கிடைக்க, அதன் அறுவடை பணியில் நேற்று முன்தினம் கைதிகள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில், ''மத்-திய சிறை, ஆத்துார், தர்மபுரி மாவட்ட சிறைகள், 12 கிளை சிறைகள் உள்ளன. 1,600 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தற்போது திறந்தவெளி சிறையில் இயற்கை முறையில் பயிரிடப்-பட்ட, 10,000 கரும்புகள் அறுவடை செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையின்போது கைதிகளுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு வழங்கப்படும். மீதி கரும்புகள், மக்களுக்கு குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.