/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்கம்பத்தில் மோதிய தனியார் கல்லுாரி பஸ்
/
மின்கம்பத்தில் மோதிய தனியார் கல்லுாரி பஸ்
ADDED : நவ 24, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்கம்பத்தில் மோதிய
தனியார் கல்லுாரி பஸ்
தாரமங்கலம், நவ. 24-
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரி பஸ் டிரைவர் நடேசன், 57. இவர் நேற்று கல்லுாரி முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு தாரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மதியம், 3:45 மணிக்கு, சின்னப்பம்பட்டி அருகே கொண்டக்காரனுாரில் வந்தபோது, சாலையோர மின்கம்பத்தில் பஸ் மோதியது. பஸ்சில் இருந்த, 3 மாணவர்கள், டிரைவர் காயமின்றி தப்பினர். பின் மின்வாரிய பணியாளர்கள், சாய்ந்த கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். டிரைவருக்கு மயக்கம் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

