/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி ஸ்கேன் பயன்படுத்திய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
/
அனுமதியின்றி ஸ்கேன் பயன்படுத்திய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
அனுமதியின்றி ஸ்கேன் பயன்படுத்திய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
அனுமதியின்றி ஸ்கேன் பயன்படுத்திய தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
ADDED : செப் 30, 2025 02:20 AM
இடைப்பாடி, இடைப்பாடியில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இடைப்பாடியில் உள்ள அரவிந்த் மருத்துவமனை உரிமையாளர், டாக்டர் கண்ணன், 58. இந்த மருத்துவமனையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சட்ட விரோதமாக தெரிவிப்பதாக கிடைத்த ரகசிய தகவல்படி, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர் நந்தினி, துணை இயக்குனர்கள் சேலம் சவுண்டம்மாள், ஆத்துார் யோகானந்த், இடைப்பாடி மருத்துவ அலுவலர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் கண்ணன், அவரது மனைவி ஜோதி, மருத்துவமனை பணியாளர் மேகநாதன் ஆகியோர் ஸ்கேன் செய்யும் மிஷினை, எடுத்து வெளியே செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கு சென்ற மருத்துவ குழுவினர், ஸ்கேன் மிஷினை பறிமுதல் செய்தனர்.
மருத்துவமனையில், ஏற்கனவே குழந்தையின் பாலினத்தை தெரிவித்ததால் 'சீல்' வைக்கப்பட்டு, இங்கு ஸ்கேன் பயன்படுத்த தடை உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை விசாரணை நடந்தது. தேசிய நல குழும திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயேந்திரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் உதவியுடன், மருத்துவமனைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் கண்ணன், அவரது மனைவி ஜோதி, மருத்துவ பணியாளர் மேகநாதன் ஆகிய மூவரையும் விசாரணைக்காக இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
மேலும் மருத்துவமனையில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், ஒரு ஸ்கேன் மிஷின், 20 ஆயிரம் ரூபாய், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.