/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரசாயனம் பயன்படுத்தியதால் தனியார் சேகோ ஆலைக்கு 'சீல்'
/
ரசாயனம் பயன்படுத்தியதால் தனியார் சேகோ ஆலைக்கு 'சீல்'
ரசாயனம் பயன்படுத்தியதால் தனியார் சேகோ ஆலைக்கு 'சீல்'
ரசாயனம் பயன்படுத்தியதால் தனியார் சேகோ ஆலைக்கு 'சீல்'
ADDED : பிப் 17, 2024 07:13 AM
தலைவாசல் : ரசாயனம் பயன்படுத்தியதால், தனியார் சேகோ ஆலைக்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சித்தேரியில், கணேசன், 50, என்பவருக்கு சேகோ ஆலை உள்ளது. அங்கு கடந்த, 13ல், சேலம் சேகோ சர்வ் மேலாண் இயக்குனர் லலித் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடாத, சோடியம் ைஹபோ குளோரைடு, 3 கேன்களில் இருந்தது.
ரசாயனம் கலப்பதற்கு வைத்திருந்த, 13,200 கிலோ ஜவ்வரிசி, 27,000 கிலோ ஸ்டார்ச் மாவு மில்க், 7,200 கிலோ ஈர ஸ்டார்ச் மாவு, 40 கிலோ மக்காச்சோளம், 120 லிட்டர் ைஹப்போ கெமிக்கல் என, 19.76 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜவ்வரிசி, ஸ்டார்ச்சை பறிமுதல் செய்து அங்கேயே வைத்தனர். தொடர்ந்து அப்பொருட்களில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து, அதன் பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர்.
புட் கிரேட் கெமிக்கலுக்கு பதில், 'நான் புட் கிரேட் கெமிக்கல்' பயன்படுத்தியதால், தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஆலைக்கு நேற்று, 'சீல்' வைத்தனர். மேலும் ஆலை உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.