/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிராமணர் சங்கத்தினர் 50 பேருக்கு பரிசு வழங்கல்
/
பிராமணர் சங்கத்தினர் 50 பேருக்கு பரிசு வழங்கல்
ADDED : ஆக 25, 2025 03:19 AM
சேலம்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சேலம் மாவட்ட கிளை சார்பில் முப்பெரும் விழா, மரவனேரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
அதில், 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, 50 மாணவ, மாணவி-யருக்கு கல்வி உதவித்தொகை, கேடயம், பரிசுகளை வழங்கி, மாநில தலைவர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் கவுரவித்தனர். தொடர்ந்து ஏழை பிராமண மக்களுக்கு, மருத்துவ உதவியும், சங்க ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் சங்க வளர்ச்சி பணி, ஆண்டறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில பொருளாளர் ஜெயராமன், மாவட்ட பொதுச்செயலர் பஞ்சநாதன், பொருளாளர் வெங்கட்-ராமன், இளைஞர் அணி சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர்.