/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறப்பாக பயிற்சி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும்: டி.ஜி.பி.,
/
சிறப்பாக பயிற்சி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும்: டி.ஜி.பி.,
சிறப்பாக பயிற்சி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும்: டி.ஜி.பி.,
சிறப்பாக பயிற்சி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும்: டி.ஜி.பி.,
ADDED : டிச 04, 2024 07:01 AM
மேட்டூர்: தமிழக முதல்வர், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ப்பட்ட, இரண்டாம் நிலை காவலர்களுக்கு பணி நியமன உத்தரவை, சமீபத்தில் வழங்கினார். அவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, 8 பயிற்சி பள்ளிகளில், 7 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதன்படி சேலம் மாவட்டம் மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில், ஆண் போலீசாருக்கான பயிற்சி இன்று தொடங்குகிறது. நேற்று, தமிழக டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர் நேற்று, மேட்டூர் போலீஸ் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில், 8 போலீஸ் பயிற்சி பள்ளிகள் உள்ளன.
இதில் திருவள்ளூர், வேலுார், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், 792 பெண் போலீசார், மதுரை, துாத்துக்குடி, சேலம், திருச்சி, கோவை பயிற்சி பள்ளிகளில், 1,861 ஆண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சிறப்பாக பயிற்சி பெறுபவர்களுக்கு பாராட்டு, பரிசு வழங்கப்படும். மேட்டூர் பயிற்சி பள்ளிக்கு சில வசதிகள் செய்ய நிர்வாகம் தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுள்ளனர். அதுதொடர்பாக பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பயிற்சி பள்ளி முதல்வர் விநாயகம்(பொ), இன்ஸ்பெக்டர்கள் பாலசரஸ்வதி, பேபி உடனிருந்தனர்.