ரேஷன் கடைகளில் பிரச்னை? இன்று சிறப்பு குறைதீர் முகாம்
ரேஷன் கடைகளில் பிரச்னை? இன்று சிறப்பு குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 13, 2026 02:50 AM
சேலம்; சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் மூலம், அனைத்து தரப்பு
மக்களும் பயன்பெற, மாதந்தோறும், 2வது சனிக்-கிழமை, 14 தாலுகா அலுவலகங்களில், மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. அதன்படி இன்று காலை, 10:00 மணி முதல் நடக்கும் குறைதீர் முகாமில், பொது வினியோகம் தொடர்பான குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு பெறலாம்.
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முக-வரி மாற்றம், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பெற்று உடனடி நடவ-டிக்கை எடுக்கப்படும். மொபைல் எண் பதிவு, மொபைல் எண் மாற்றம் செய்வதற்கான மனு மீதும் நடவடிக்கை உண்டு.தவிர ரேஷன் கடைகளின் செயல்பாடு, அத்தியா-வசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
