/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடமான நகையை மீட்டபோது பிரச்னை; வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
/
அடமான நகையை மீட்டபோது பிரச்னை; வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அடமான நகையை மீட்டபோது பிரச்னை; வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அடமான நகையை மீட்டபோது பிரச்னை; வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ADDED : பிப் 26, 2025 07:21 AM
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி, சடையாண்டி ஊற்று பகுதியை சேர்ந்தவர் ராஜா, 32, தறிதொழிலாளி. இவர் கடந்தாண்டு, இளம்பிள்ளையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில், 7 பவுன் நகையை அடமானம் வைத்து கடன் பெற்றார். இந்நிலையில், கடன் தவணை கெடு நேற்று முடிந்ததால், நகையை மீட்டு அதே பகுதியில் உள்ள மற்றொரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து, கடன் வாங்க முயன்ற போது, அந்த தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் நகையை பரிசோதனை செய்ததில் நகை போலி என கூறியுள்ளார். அதனால் மீண்டும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சென்ற ராஜா, எனது ஒரிஜினல் நகையை கொடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதால், வங்கியில் நகையை அடமானம் வைத்த, 30க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை, 6:00 மணியளவில் வங்கி நுழைவு வாயில் முன் முற்றுகையிட்டு நாங்கள் வழங்கிய நகைகள் ஒரிஜினலா அல்லது போலியா என தெரியப்படுத்துமாறு கூச்சலிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த, மகுடஞ்சாவடி போலீசார் ராஜாவிடம் புகாரை பெற்று, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.