/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மேகதாது அணை விவகாரத்தில் திட்ட அறிக்கை; காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு அனுப்பி-வைப்பு'

ADDED : டிச 05, 2025 10:46 AM
மேட்டூர்: கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் காவிரி நீரை அளவீடு செய்ய, மத்திய நீர் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் அளவீடு மையத்தை, காவிரி மேலாண்மை வாரிய தலைவர் ஹல்தார், நேற்று பார்வையிட்டார். அங்கிருந்து தமிழகம் வரும் நீரின் அளவு, மேட்டூர் அணை, 16 கண் மதகு, கவர்னர் பார்வை மாடம், இடதுகரை பகுதிகளில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
காவிரி மேலாண் வாரியம் உருவாக்கப்பட்டது முதல், அவ்வப்போது உறுப்பினர் குழு கூட்-டத்தை கூட்டி, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விடுவிக்கும் நீரின் அளவை உறுதி செய்கிறோம். கர்நாடகா - தமிழக எல்-லையிலுள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அது-தொடர்பாக மேலாண் வாரிய உறுப்பினர்கள், காவிரி மேலாண் வாரியத்தில் உள்ள தமிழகம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி நிர்வாக கருத்-துகள் கேட்டு விரிவான திட்ட அறிக்கை, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சிவகுமார், மேட்டூர் அணை கண்-காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேற்பார்வை பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பொறி-யாளர்கள் உடனிருந்தனர்.