sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'சாயப்பட்டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

/

'சாயப்பட்டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

'சாயப்பட்டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

'சாயப்பட்டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'


ADDED : டிச 05, 2025 10:45 AM

Google News

ADDED : டிச 05, 2025 10:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், 880 கோடி ரூபாயில் ஜவுளி பூங்கா கட்ட நடவடிக்கை எடுக்-கப்பட்டு வருகிறது. அதேநேரம், 55 சாயப்பட்டறைகள் அமைக்கப்ப-டுவதாக கூறி, அப்பகுதி விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, அப்பகுதியில், பா.ஜ.,வின் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆய்வு செய்து, அப்ப-குதி விவசாயிகள், மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து நாகராஜ் அளித்த பேட்டி: இப்பகுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் மட்-டுமின்றி, குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் இப்பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும். குடிநீர் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு தொழிலை பெருக்க நினைக்கிறது.

ஆனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்படி சாயப்பட்டறை அமைக்கக்கூடாது. இதுதொடர்-பாக இங்குள்ள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்றால், அவர்கள் இல்லை. கலெக்டர் உள்-ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கருத்து கேட்ட பின்னர் மத்திய அரசிடம் தெரிவித்து, சாயப்பட்-டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us