ADDED : ஆக 16, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில், குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளிக்கு, 50,000 ரூபாய் மதிப்பில், நவீன ப்ரொஜெக்டர், திரை நேற்று வழங்கப்பட்டது.
தொடர்ந்து ராஜஸ்தான் சேலம் வாழ் இளைஞர்கள், 10,000 ரூபாய் மதிப்பில் எழுதுபொருட்கள், இனிப்பு வழங்கினர்.
அதேபோல் ஜருகுமலை அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் விஷ்ணுப்ரியா, குரால்நத்தம் அரசு பள்ளிக்கு, 2 சுவர் கடிகாரம் வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு, கல்வியாளர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர் தெய்வநாயகம், பெற்றோர், கிராம மக்கள் பங்கேற்றனர்.

