/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு
/
பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு
ADDED : அக் 05, 2025 01:41 AM
சேலம், தமிழக பள்ளி கல்வித்துறையில், காலியாக உள்ள பணியாளர் இடங்களை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமனம் தரும் முன், காலி இடங்களுக்கு, மனமொத்த மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
இரு நாட்கள் நடக்க உள்ள நிலையில், முதல் நாளான நேற்று, நேர்முக உதவியாளர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு, கண்காணிப்பு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. தமிழகம் முழுதும், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் இருந்து இடமாறுதல் கலந்தாய்வில் யாரும் பங்கேற்கவில்லை. அதேநேரம், 3 பேருக்கு பதவி உயர்வு மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது.