/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் கோட்ட ரயில்களில் 'ஓசி' பயணம் 6 மாதத்தில் ரூ.11 கோடி அபராதம் வசூல்

ADDED : அக் 05, 2025 01:39 AM
சேலம், சேலம் ரயில்வே கோட்டத்தில், 6 மாதங்களில், 'ஓசி' பயணம் உள்ளிட்ட விதி மீறல்களுக்கு, 11.88 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஸ்டேஷன்கள், ரயில்களில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் வாசுதேவன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், தொடர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, டிக்கெட் இல்லாமல், 'ஓசி' பயணம் மேற்கொண்ட, 85,225 பேரிடம், 7.28 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதை கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 15.9 சதவீதம் அபராத தொகை அதிகரித்துள்ளது.
அத்துடன் முறையான டிக்கெட் இல்லாமல் பயணித்த, 79,339 பேரிடமிருந்து, 4.58 கோடி ரூபாய்; கூடுதல் லக்கேஜ் எடுத்து வந்த, 423 பேரிடமிருந்து, 2.29 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, கடந்த, 6 மாதங்களில், 11.88 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம், 1.33 கோடி ரூபாய்; முறையான டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம், 94.81 லட்சம்; கூடுதல் லக்கேஜ் எடுத்து வந்ததாக, 52,730 என, 2.28 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.