/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புரட்டாசி எதிரொலி ஆடு விற்பனை மந்தம்
/
புரட்டாசி எதிரொலி ஆடு விற்பனை மந்தம்
ADDED : அக் 05, 2025 01:36 AM
இடைப்பாடி, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் சந்தையில் நேற்று, 2,350 ஆடுகளை, விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 9,350 முதல், 9,700 ரூபாய்; செம்மறியாடு, 8,300 முதல், 8,850 ரூபாய் வரை விலைபோனது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், 100 முதல், 300 ரூபாய் வரை, ஆடுகள் விலை அதிகரித்தது. இதன்மூலம், 2.20 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
இதுகுறித்து, ஆடு வியாபாரிகள் சங்க, சேலம் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''சந்தைக்கு வாரந்தோறும், 4,000 முதல், 6,000 ஆடுகள் வரை கொண்டு வரப்படும். தற்போது புரட்டாசியால், கறி விற்பனை குறைந்த அளவில் உள்ளது. இதனால் சந்தையில் ஆடுகள் வரத்து சரிந்தது. 500க்கும் மேற்பட்ட ஆடுகள், விற்கப்படாமல் திரும்ப கொண்டு செல்லப்பட்டன,'' என்றார்.