/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆய்வு செய்யாமல் தடையின்மை சான்று :ஆசிரியர் விபரங்களை அனுப்ப உத்தரவு
/
ஆய்வு செய்யாமல் தடையின்மை சான்று :ஆசிரியர் விபரங்களை அனுப்ப உத்தரவு
ஆய்வு செய்யாமல் தடையின்மை சான்று :ஆசிரியர் விபரங்களை அனுப்ப உத்தரவு
ஆய்வு செய்யாமல் தடையின்மை சான்று :ஆசிரியர் விபரங்களை அனுப்ப உத்தரவு
ADDED : பிப் 16, 2024 12:49 PM
சேலம்: அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்கியதற்கான விபரங்களை அனுப்ப, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஓய்வு பெறும் போது அதற்கான பலன்களை பெற, வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம், தடையின்மை சான்று பெற்று இணைக்க வேண்டும். ஓய்வு பெறும் நாள் வரை, தணிக்கை தடை எதுவும் இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கே, இவை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தணிக்கை தடை பல ஆண்டுகள் நிலுவையில் இருந்தும், அவற்றை நிவர்த்தி செய்யாமல், அரசுக்கு நிதியிழப்பு செய்த ஆசிரியர்களுக்கும் தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளதாக, புகார் அனுப்பப்பட்டது. இதனால் கடந்த வாரம், தணிக்கை தடை இருந்தும் தடையின்மை சான்று வழங்கியிருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர் முழு பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் அதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டுபிடிக்கும்படி, இதுவரை தடையின்மை சான்று வழங்கிய விபரங்களை, வரும், 21க்குள் அனுப்ப, கல்வித்துறை அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் முறையாக ஆய்வு செய்யாமல் தடையின்மை சான்று வழங்கிய அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.