/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால் ஏற்படுத்த முன்மொழிவு
/
ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால் ஏற்படுத்த முன்மொழிவு
ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால் ஏற்படுத்த முன்மொழிவு
ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால் ஏற்படுத்த முன்மொழிவு
ADDED : அக் 25, 2025 01:10 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பக்கத்தில் உள்ள பெரமனுார் ஊராட்சியில் உள்ள விவசாய வயலில் புகுந்ததால், பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று முன்தினம், பனமரத்துப்பட்டி கமிஷனர் கார்த்திகேயன், டவுன் பஞ்சாயத்து தலைவி பரமேஸ்வரி, தி.மு.க.,வின், முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட கட்சியினர், பொறியாளர்கள், தாசிக்காடு, பெரமனுாரில், கழிவுநீர் புகுந்த பகுதிகளை பார்வையிட்டனர். மழைநீர் செல்லும் தடத்தில் உள்ள அடைப்புகளை சரி செய்யவும், பெரமனுார் குட்டையில் இருந்து அம்மாபாளையம் ஏரிக்கு மழைநீர் சென்றடையும் பாதையை சீரமைக்கவும் ஆலோசனை தெரிவித்தனர்.
இதுகுறித்து கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், ''ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க முன்மொழிவு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலை அமைச்சரிடம் நிதி பெற்று தருவதாக, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்,'' என்றார்.

