/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணவரை அடித்துக்கொன்ற முதல் மனைவிக்கு 'காப்பு'
/
கணவரை அடித்துக்கொன்ற முதல் மனைவிக்கு 'காப்பு'
ADDED : ஏப் 20, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: கணவரை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி, செங்கட்டை சேர்ந்த, கட்டட தொழிலாளி கோபால், 33. இவரது மனைவியர் பவித்ரா, 27; ராமலட்சுமி. இரு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு குடும்ப பிரச்னையின்போது, முதல் மனைவி பவித்ராவின் தம்பி மஞ்சுநாத்தை, கோபால் தாக்கியுள்ளார். இதைப்பார்த்த பவித்ரா, உருட்டுக்கட்டையால் கோபாலை தாக்கியபோது, அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார், கொலை வழக்கு பதிந்து, பவித்ராவை நேற்று கைது செய்தனர்.