/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., அரசை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 02:03 AM
ஆத்துார், ஆத்துார், நரசிங்கபுரம் நகர அ.தி.மு.க., சார்பில், ஆத்துாரில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்தார். அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சொத்து வரி, மின் கட்டண உயர்வால், ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். தி.மு.க., ஆட்சியில் நடத்தும் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன், தகுதி அடிப்படையில் வழங்கப்பட்ட
மகளிர் உரிமைத்தொகை, வரும் தேர்தலுக்காக தற்போது மனு பெறுகின்றனர்.
சட்டம், ஒழுங்கு சீர்கேடான நிலையிலும், பாலியல் தொல்லை, கொலை, கொள்ளை அதிகரித்து மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். நிர்வாக சீர்கேட்டை, 4 ஆண்டுகளாக சரிசெய்யாத நிலையில், அ.தி.மு.க., மீது, தி.மு.க., பொய் தகவல் கூறுகிறது.
அ.தி.மு.க., - பா.ஜ., வலுவான கூட்டணியால், தி.மு.க.,வுக்கு காய்ச்சல் வந்துவிட்டதால், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உளறி வருகின்றனர். வரும், 17ல்(நாளை), ஆத்துார், ராணிப்பேட்டையில், அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில நிர்வாகி காளிமுத்து, நகர செயலர்கள் ஆத்துார் மோகன், நரசிங்கபுரம் மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.