/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பைக்கு எதிர்ப்பு 150வது நாளாக ஆர்ப்பாட்டம்
/
குப்பைக்கு எதிர்ப்பு 150வது நாளாக ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2025 02:33 AM
இடைப்பாடி: குறுக்குப்பாறையூரில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, 150வது நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே அரசிராமணி குள்ளம்பட்டி டவுன் பஞ்.,சில் சேகரிக்கப்படும் குப்பையை, குறுக்குப்பாறையூரில் கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு, ஆறு மாதங்களாக திடக்கழிவு மேலாண் திட்டப்பணி நடந்து, அக்டோபர் முதல், அப்பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது குறுக்குப்பாறையூர் மக்கள், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, 150வது நாளாக, திடக்கழிவு மேலாண் பணி நடக்கும் இடத்தின் முன், தமிழக விவசாய சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

