/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; திரும்பிச்சென்ற அதிகாரிகள்
/
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; திரும்பிச்சென்ற அதிகாரிகள்
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; திரும்பிச்சென்ற அதிகாரிகள்
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; திரும்பிச்சென்ற அதிகாரிகள்
ADDED : டிச 11, 2024 07:17 AM
தாரமங்கலம் ; பால் கொள்முதல் நிலையம் அமைக்க, மக்கள் ஏற்பாடு செய்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் முயன்றனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம், கோணகாபாடி ஊராட்சி தொட்டியனுார் பிரிவில், சில நாட்களுக்கு முன் அரசு இடத்தில் ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கி பூமி பூஜை போடப்பட்டது. பின் அதற்கு கொடுத்த அனுமதியை, ஊராட்சி ரத்து செய்தது. இதனால் அப்பகுதி மக்கள், அந்த இடத்தில் பால் கொள்முதல் நிலையம் அமைக்க, நேற்று முன்தினம் ஏற்பாடு செய்தனர். ஆனால் அரசிடம் அனுமதி பெறவில்லை. இதை அறிந்து நேற்று அங்கு சென்ற வருவாய்த்துறையினர், தாரமங்கலம் போலீசார், ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அதற்கு ஊராட்சி துணைத்தலைவர் பிரபு உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'தொட்டியனுார் பிரிவில் ரேஷன் கடை கட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கு வருவாய்த்துறையினர் இடம் ஒதுக்கி கொடுத்தனர். பூமி பூஜை போட்ட பின், சிலரது துாண்டுதலால், ரேஷன் கடைக்கு அனுமதி ரத்து செய்து, அதை வேறு ஊராட்சிக்கு கொடுத்துவிட்டனர். தற்போது அந்த இடத்தில், பால் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம்' என்றனர்.

