/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய அரசை கண்டித்துகாங்., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்துகாங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 17, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அப்போது, 'நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்., முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் மீது, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
காங்., தலைவர்கள் மீது, மத்திய அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியில் செயல்படுகிறது' என கூறி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், ஆத்துார் நகர தலைவர் முருகன், முன்னாள் சேர்மன் சக்கரவர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.