/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
/
பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
ADDED : மே 17, 2025 01:27 AM
சேலம், சேலம், மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த, 7 குடும்பத்தினர், கோரைப்பாய், தலையணை சகிதமாக, நேற்று காலை, 11:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் குடிபுகுந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தமிழக அரசு, எங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கியது. அதே பகுதியை சேர்ந்த ஒருவர், நிலத்துக்கான தடத்தை ஆக்கிரமித்ததால், அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து அவர்கள், ஏற்கனவே கொடுத்த மனுக்களை வீசி, கோபத்தை வெளிப்படுத்தினர். அதை தடுக்க முயன்ற போலீசாரிடம், வாக்குவாதம் செய்தனர். பின் அதிகாரிகள் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் தர்ணாவை கைவிட்டு சென்றனர்.