/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகராட்சி அலுவலகம் உள்ளே அடிப்படை வசதி கேட்டு தர்ணா
/
நகராட்சி அலுவலகம் உள்ளே அடிப்படை வசதி கேட்டு தர்ணா
நகராட்சி அலுவலகம் உள்ளே அடிப்படை வசதி கேட்டு தர்ணா
நகராட்சி அலுவலகம் உள்ளே அடிப்படை வசதி கேட்டு தர்ணா
ADDED : டிச 14, 2024 01:17 AM
தாரமங்கலம், டிச. 14-
தாரமங்கலம், 4வது வார்டு குருவம்பாறையை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று, நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள், அலுவலகம் உள்ளே தரையில் அமர்ந்து, 'தமிழக அரசே; அடிப்படை வசதிகளை செய்து கொடு' என, கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, நகராட்சி தலைவர் குணசேகரனை, அவரது அறை முன் சந்திந்தனர்.
அப்போது மக்கள், 'எங்கள் பகுதியில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. சாலை இல்லாததால், உடல்நிலை சரியில்லாதவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல முடியாமல் தவிக்கிறோம். அடிப்படை வசதி கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. தற்போது மழைக்காலம் என்பதால், எங்கள் பகுதியே சேறு, சகதியாக உள்ளது' என்றனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக, தலைவர் கூறியதால், மக்கள் கலைந்து
சென்றனர்.