ADDED : அக் 17, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், துப்புரவு மக்கள் குழு சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தலைவர் பூபதி தலைமை வகித்தார்.
அதில் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி போனஸ், 20 சதவீதம் வழங்குதல்; பல ஆண்டாக பணிபுரியும் துாய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.