/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷனில் புளூடூத் மூலம் விற்பனை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
/
ரேஷனில் புளூடூத் மூலம் விற்பனை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் புளூடூத் மூலம் விற்பனை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ரேஷனில் புளூடூத் மூலம் விற்பனை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2025 04:05 AM
சேலம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணி-யாளர் சங்கம், சேலம் மாவட்ட கிளை சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் ரேஷன் கடைகளில் தற்போது புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதால், ஒரு கார்டுக்கு பொருட்கள் வழங்க, 10 நிமிடமாகிறது. இதனால் தினமும், 50 கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுவதால், நுகர்வோர் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. புளூடூத் மூலம் விற்பனை மேற்கொள்ளும் முறையை ரத்து செய்ய வேண்டும்.அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்டவற்றை, சரியான எடையில் வழங்க உறுதிப்படுத்தல்; பதவி உயர்வில் சம வாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலர் தமிழழகன், பொரு-ளாளர் குமார் உள்பட, 200க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்.