/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: அகில இந்திய விவசாய சங்கத்தினர், மா.கம்யூ., சார்பில், இடைப்பாடி தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலர் பழனியப்பன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட செயலர் சேகர், தொடங்கி வைத்தார்.
அதில் சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள், ஒரே வீட்டில் பல குடும்பங்களாக வசிக்கும் மக்கள் உள்-ளிட்ட அனைவருக்கும் இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.