/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயிக்கக்கோரி போராட்டம்
/
மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயிக்கக்கோரி போராட்டம்
மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயிக்கக்கோரி போராட்டம்
மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயிக்கக்கோரி போராட்டம்
ADDED : ஆக 06, 2025 01:29 AM
கெங்கவல்லி, தம்மம்பட்டி அருகே பச்சமலை ஊராட்சியில், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள், மானாவாரி பயிரான மரவள்ளி கிழங்கை அதிகமாக சாகுபடி செய்கின்றனர். தற்போது அதன் அறுவடையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து கிழங்குகளை, ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு, அரவைக்கு அனுப்புகின்றனர்.
ஆனால் கிழங்கு எடுத்துச்செல்லும் லாரி வாடகையை டன்னுக்கு 1,200 ரூபாய் என, உயர்த்தியுள்ளனர். இதை குறைக்கக்கோரியும், நெல், கரும்பு போன்று மரவள்ளி கிழங்குக்கு டன்னுக்கு, 15,000 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கக்கோரியும், பெரிய
பக்களம் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று முன்தினம், இரு அரசு பஸ்களை சிறைபிடித்து, கண்களில் கறுப்பு துணி கட்டி, கையில் தட்டுகளை ஏந்தி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி வருவாய்த்துறையினர், தம்மம்பட்டி போலீசார், பேச்சு நடத்தி, லாரி வாடகையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர்.